ராஜபாளையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளர் ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா பேட்டி,*
ராஜபாளையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளர் ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா பேட்டி,*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளர் ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா பேட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த மறு தினமே அமலாக்கத்துறையும் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக கூறுகிறது - பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அமைப்புகளில் ஒன்றாக அமலாக்கத்துறை செயல்படுகிறது - எதிர்க்கட்சியை கவிழ்க்கும் வேலையை மட்டுமே பாஜக செய்கிறது - இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பணியை பாஜக செய்யவில்லை - மேக் இன் இந்தியா திட்டம் தற்போது முறையாக செயல்படவில்லை - இறக்குமதி அதிகரித்துள்ளது - ஏற்றுமதி 15 விழுக்காடு குறைந்துள்ளது - ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறும் அமலாக்கத்துறை அது குறித்த ஆவணங்களை தெரிவிக்கவில்லை - அண்ணாமலை அறிவித்த தகவலையே மீண்டும் அமலாக்கத்துறை தெரிவிக்கிறது - குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தமிழகத்தை ஆளும் திமுகவுக்கு இரு மொழிக் கொள்கை இருப்பது போல், ஒவ்வொரு மாநில அரசுக்கும் தனித்தனி கொள்கை உண்டு - காங்கிரஸ், திமுக அரசியல் ரீதியாக கூட்டணியாக இருந்தாலும் கொள்கை ரீதியாக வேறுபாடு உண்டு - காங்கிரசின் கொள்கை ஹிந்தி படிப்பதில் தவறில்லை என்பதே - ஆனால் ஹிந்தி படிப்பதை கட்டாயப்படுத்துவதை எதிர்க்கிறோம் - இந்தியாவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஹிந்தி அதிக மக்களால் பேசப்படுவதால் அண்டை மாநில மொழிகளை தவிர்த்து, மும்மொழி கொள்கையில் ஹிந்தி முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்தார் பேட்டி: ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா - (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளர்)