ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.....*

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.....*;

Update: 2025-03-17 14:28 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை புழுக்கமான சூழ்நிலை நிலவி வந்த போதும் பிற்பகலில் வெயில் கடுமையாக அடித்தது. இதன் காரணமாக நகர் முழுவதும் பயங்கரமான வெப்பம் உணரப்பட்டது. தொடர்ந்து மாலை நேரத்தில் திடீரென கூடிய மேக கூட்டம் கனமழையாக கொட்டி தீர்த்தது. மழையின் போது பலத்த காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான வெப்பம் வாட்டிவந்த நிலையில் இன்று பெய்த மழை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News