நள்ளிரவு வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டிகள்*
நள்ளிரவு வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டிகள்*;
நள்ளிரவு வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டிகள் அருப்புக்கோட்டையில் முதன்முறையாக மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி; பெண்கள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது நாளில் நள்ளிரவு வரை நடைபெற்ற ஆண்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பனம் பரிசு கோப்பைகளை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அதிமுக வழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் இளைஞரணி செயலாளர் ராம் பாண்டியன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் முதன் முறையாக மாநில அளவிலான மூன்று நாட்கள் கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிகளில் பெண்கள் அணிக்கு தனியாகவும், ஆண்கள் அணிக்கு தனியாகவும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. பெண்கள் அணைக்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஆண்கள் அணிக்கு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கபடி அணி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் ஆக்ரோஷமாக விளையாடிய கபடி வீரர்கள் கபடி கபடி என எதிரணி வீரர்களை முட்டி தூக்கினர். இந்த போட்டிகளை பாளையம்பட்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ 51,000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ 30,000 ரொக்கப்பணம் மற்றும் கோப்பை, மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு ரூ 20,000 ரொக்கப் பணம் கோப்பை வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் இணைந்து பரிசுகள் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.