கோவை: வியாபாரிகளிடம் அதிக சுங்கவரி வசூலிப்பதாக புகார் !

கழுத்தில் காய்கள் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்து வந்து சுங்க வரிக்கு எதிராக விவசாயிகள் மனு.;

Update: 2025-03-18 04:08 GMT
  • whatsapp icon
கோவை மாவட்டம், சூலூர் செஞ்சேரிமலை வாரச்சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கவரி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 200 ரூபாய் சுங்கவரி கட்டி வந்த நிலையில், தற்போது 400 ரூபாய் கேட்பதாகவும், சந்தைக்கு வெளியில் காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சந்தைக்கு உள்ளே உள்ள கடைகளில் மட்டுமே காய்கறிகள் வாங்க வேண்டும் என இந்த வருடத்திற்கான சுங்கம் எடுத்தவர்கள் கூறுவதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து 180க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் பல வருடங்களாக வியாபாரம் செய்து வருகிறோம். திடீரென சுங்க வரியை இரட்டிப்பாக்கி உள்ளனர். அதேபோல் வெளியில் கடை வைத்துள்ளவர்கள் உள்ளே தான் காய்கறிகள் வாங்க வேண்டும் என்கின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Similar News