கோவை: காதல் திருமணம்- பெற்றோரால் ஆபத்து என புகார் !
கோயம்புத்தூரில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தனது பெற்றோர்களால் தனக்கும் தனது கணவருக்கும் தொல்லை ஏற்படுவதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.;

கோயம்புத்தூரில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தனது பெற்றோர்களால் தனக்கும் தனது கணவருக்கும் தொல்லை ஏற்படுவதாக காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். சாரா என்ற விஜயசாமுண்டீஸ்வரி (வயது 25), கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஜக்கரியா என்பவரை கடந்த ஜனவரி 20, 2025 அன்று காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், சாராவின் பெற்றோர்கள் அவர்கள் மீது பொய்யான புகார்களை கூறி, கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் மூலம் அவர்களை பிரிக்க முயற்சிப்பதாக சாரா குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், தனது பெற்றோர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே தன்னை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் சாரா காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.