ஊட்டி மசினகுடி பகுதியில் வளங்கள் செழிக்கவும் மழை பொழிக்கவும் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர்

சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிசியாக நடைபெற்றது;

Update: 2025-03-18 07:22 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் உதகை மசினகுடி அருகே உள்ள பேசும் தெய்வம் என்று அழைக்கப்படும் சிறியூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் இந்த ஆண்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து கம்பம் நாட்டு விழா, அலங்கார பூஜை, அம்மன் அழைப்பு, ஆகியவை நடைபெற்றன. நேற்று (17ம் தேதி) பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வரப்பட்டது. மாலை 3:00 மணிக்கு மாசி கரியண்ட ஐயன் அழைப்பு நடைப்பெற்றது. ஜடய லிங்க ஐயன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வளம் பெருகவும், மழை பொழிக்கவும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று காலை 7:00 மணிக்கு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றன.

Similar News