முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.;

தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும்,‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்;திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஆகியோர் தகுதியானவர்கள். இத்திட்டத்திற்கான முக்கியமான தகுதிகள்: முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. படைப்பணியின் போது காலமான படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்த பட்ச வயது வரம்பு 21 ஆகும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. எனவே,‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்; தேவையான விவரங்களை பெற விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (04563-296382) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.