பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ...*

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ...*;

Update: 2025-03-18 15:20 GMT
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில்  சந்தித்து கோரிக்கை மனு ...*
  • whatsapp icon
விருதுநகரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய மஸ்தூரசங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சமுத்திரம் தலைமையில், இபிஎப் பென்ஷன் குறைந்தபட்சம் ரூ5000 வழங்கிட வேண்டும், ஊதிய உச்ச வரம்பை ரூ 30000 முப ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், இஎஸ்ஐ உச்சவரம்பை ரூ 42000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பொதுத்துறை சொத்துக்களை தனியார்க்கு விற்க கூடாது, காப்பீடு மற்றும் நிதித்துறையில் அந்நிய முதலீட்டை முழுமையாக கைவிட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும் கடைசி மாத சம்பளத்தில் 50% தொகையினை பென்சனாக வழங்க உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்

Similar News