உதகையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது;
உதகை நகர தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு உதகை நகர தி.மு.க., சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் அருகில் நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர்அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர நிர்வாகிகள் ஜெயகோபி, கிருஷ்ணன், அணில்குமார், தம்பி இஸ்மாயில், கார்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். கூட்ட முடிவில் நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் நன்டறி கூறினார்