இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவர் மீது போர்த்திய துணியின் நகல் உதகை தேவாலயத்துக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பிரார்த்தனை

திரளான பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன;

Update: 2025-03-19 04:42 GMT
  • whatsapp icon
தமிழகத்தில் முதன் முதலாக இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவர் மீது போர்திய துணியின் நகல் உதகை தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் ஆயிர கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து அத்துணியை தொட்டு வணங்கி பிராத்தனை செய்து வருகின்றனர். இயேசு கிறிஸ்து தனது 33 வது வயதில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட பின்பு கல்லறையில் அடக்கம் செய்தனர். அப்போது அவரை ஒரு வெள்ளை நிற துணியில் சுத்தி அடக்கம் செய்தனர். இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வெள்ளைத் துணியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருக்கு இருந்த தழும்புகள் மற்றும் சாட்டை அடி தழும்புகள் பதிந்திருந்தது. தற்பொழுது வரை அந்த துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணியின் உண்மை தன்மையை அறிய ஆறு நகல்கள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு அது உலகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் ஒரு நகல் இன்று உதகையில் உள்ள சூசையப்பர் தேவ ஆலயத்தில் வைக்கப்பட்டது. நாளை குன்னூரில் உள்ள புனித அந்தோணியார் தேவ ஆலயத்தில் வைக்கப்பட்டு, பின்பு கேரளா எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழகத்தில் முதன் முதலாக இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட துணியில் ஒரு நகல் நீலகிரி மாவட்டம் உதகைக்கு எடுத்துவரப்பட்ட செய்தி அறிந்து, உதகை மட்டும் இல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சூசையப்பர் ஆலயத்திற்கு வந்து அந்த துணியை தொட்டு வணங்கி பிராத்தனை செய்து வருகின்றர்.

Similar News