ஆற்காடு:வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!;

ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் குடியிருப்பவர் சாமி (வயது 30). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆற்காட்டில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சென்றுள்ளனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கிரில்கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சாமி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.