மாணவியை காதலிப்பதாக தொந்தரவு செய்தவர் கைது!
பள்ளி மாணவியை காதல் பதாக தொந்தரவு செய்தவர் கைது;

பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நெமிலி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து சலூன் கடைக்காரர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.