அதிமுக பிரமுகர் கொலை வழக்கு விசாரணை துவக்கம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்;

Update: 2025-03-19 05:40 GMT
  • whatsapp icon
தர்மபுரியை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் வீரமணி கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அங்கிருந்து வெளியே சென்றவர்களில் சிலரிடையே திடீரென அடிதடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். வீரமணி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி நகர காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் கள். இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை இன்று மார்ச் 19 தொடர்ந்து நடைபெற உள்ளது.

Similar News