அரக்கோணம் அருகே தெரு நாய் கடித்ததில் ஒருவர் காயம்
தெரு நாய் கடித்ததில் ஒருவர் காயம்;

அரக்கோணம் அடுத்த மோசூர் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி இவர் இன்று(மார்.18) மாலை 4 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தெரு நாய்கள் இவரை கடித்தன. இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாய் கடி சம்பவங்கள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒருவரை நாய் கடித்துள்ளது.