கோவை: வெள்ளியங்கிரி மலையில் திடீர் சூழல் காற்று !

வெள்ளிங்கிரி மலையில் திடீரென சூழல் காற்று ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-03-19 05:53 GMT
கோவை: வெள்ளியங்கிரி மலையில் திடீர் சூழல் காற்று !
  • whatsapp icon
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.கோடை காலம் என்பதால், தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் நேற்று திடீரென சூழல் காற்று உருவானது. இதனை சற்றும் எதிர்பாராத பக்தர்கள், சில நிமிடங்கள் மெய் மறந்து நின்றனர். பின்னர், தங்களது செல்போன்களில் இந்த அரிய காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வெள்ளியங்கிரி மலையில் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாக நிகழ்கின்றன. இந்த சூழல் காற்றினால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மலைப் பகுதியில் இதுபோன்ற எதிர்பாராத சூழல் மாற்றங்கள் ஏற்படுவதால், பக்தர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News