கோவை: தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளமாக கொடுக்கவில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;

கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளமாக கொடுக்கவில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறியும், மத்திய அரசுக்கு சொந்தமான, தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் 2020 முதல் இயக்கப்பட வில்லை எனவும் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டும் வழங்கி வந்த நிலையில் தற்போது எந்த சம்பளமும் வழங்கவில்லை எனக் கூறி தொழிலாளர்கள குடும்பத்துடன் கையில் பூட்டுடன் தேசிய பஞ்சாலை கழக அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எல்.பி.எப் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கூறும் போது , தொழிலாளர்களுடைய, வாழ்வாதாரத்திற்காக தான், தி.மு.க தொழிற் சங்கம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. மோடி போன்றோர், அண்ணாமலை போன்றோரை தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். அதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மோடி அரசால் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடிய ஐந்து மாத சம்பள பாக்கி, 200 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் போராட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.