கோவை: பெருசு திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு !

பெருசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.;

Update: 2025-03-19 07:00 GMT
கோவை: பெருசு திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு !
  • whatsapp icon
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் சுனில் ரெட்டி, நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பால சரவணன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான பெருசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பெருசு திரைப்பட குழுவினர், நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் நடிகர் வைபவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, மார்ச் 14-ம் தேதி பெருசு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருப்பதாகவும், கோவை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரடியாக பட குழுவினர் வந்து இருப்பதாகவும் வைபவ் தெரிவித்தார். பொது மக்களுக்கு எந்த படம் நன்றாக ஓடும் ஓடாது என்பது தெரியும். குடும்பப்பாங்கான படத்தை விரும்பி பார்க்கிறார்கள். எங்களின் படத்தை நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் பார்த்து இருக்கிறார்கள். ஒரு புது விதமான கதையோடு இப்படம் இயக்கப்பட்டு இருக்கிறது. நிறைய காமெடி நடிகர்கள் சேர்ந்து நடித்து இருப்பதால், நல்ல காமெடி படம் நன்றாக வந்து இருக்கிறது. மலையாள படங்களை பார்க்கும் பொழுது திரைப்படம் நன்றாக வெளி வந்து இருக்கிறது என்று கூறுவோமே அதைப் போலவே இதுவும் நன்றாக பிளாக் ஹியூமரோடு வெளி வந்து இருக்கிறது என்று கூறினார்.

Similar News