ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை!
ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு இன்று மார்ச் 19 புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு இன்று மார்ச் 19 புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.