அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில், கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில், கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-03-19 18:06 GMT
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் மூலம், உயர்கல்விக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பில் நன்றாக படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சமூகம், பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் உள்ளார்களா என்று ஆய்வு செய்து பார்த்தால், பெரும்பாலும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிறந்த நிலைமையில் இல்லை எனவும், சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்களில் சிலர் நல்ல நிலைமையில் இருப்பது என்பதும் தெரிய வருகிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் அனைவரின் பொது பண்புகளை எடுத்து பார்த்தால் அது அவர்களுக்கு உரிய தேடல்களும், வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வும் இருந்திருக்கிறது என்பது தான். ஒரு சாதாரண மாணவன் தனது கல்லூரியில் இளநிலை படிப்பினை படித்து விட்டு, மேற்படிப்பு படிப்பதற்கான தகவல்களையும், தேடுதல்களையும், ஒரு சிலரிடம் கேட்டு வாய்;ப்புகள் பற்றிய விழிப்புணர்வுகளையும், வழிமுறைகளை பின்பற்றியதால் தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்று நல்ல நிறுவனத்தில் பணி பெற்றுக்கூடிய உதாரணத்தையும் பார்க்க முடிகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களின் வாய்ப்புகள் குறித்த தகவல்களை யார் அதிகம் தெரிந்து கொள்கிறார்களோ அவர்களே இலக்குகளை அடைவார்கள். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதிய கற்றல் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், உங்களுடைய விருப்பம், உங்களது தேவை, எதிர்கால கனவு இவற்றையெல்லாம் நிறைவேற்ற ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், அதனை நாம் தான் தேடி செல்ல வேண்டும். நீங்கள் வாய்ப்புகளை தேடி சென்றால், அது உங்களால் கண்டிப்பாக அடைய முடியும். மாணவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை அறிந்து கொண்டு அதனை பெற்று இந்த சமூகத்தில், பொருளாதாரத்தில் சிறந்த மாணவர்களாக விளங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Similar News