மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....;

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.... தமிழக முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2021 தேர்தல் வாக்குறுதியின் படி வருவாய்த்துறை, கிராம உதவியாளர், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு, காலமுறை ஓய்வூதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க கோரியும், தூய்மை காவலர்கள், மக்கள் நல பணியாளர்கள், மற்றும் புற ஆதார் ஊழியர்களுக்கு பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.