கோவை: வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது !
செல்போன் பறித்து வழிபறியில் ஈடுபட்ட நபர் கைது .;
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் தேவராஜன் (65) என்பவர் கடந்த 11.02.2025 அன்று சிந்தாமணி புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென்று செல்போனை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (19.03.2025) நீலாம்பூர் அருகே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹசைன்(23) என்பவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்