புளிய மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு
மதுரை பேலஸ் ரோட்டில் புளிய மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது;
மதுரை கீழவாசல் பேலஸ் ரோட்டில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் முன்பாக இன்று (மார்ச் .20)அதிகாலை 6 மணி அளவில் பெரிய புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. நல்வாய்ப்பாக வாகனங்களுக்கு சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.