பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் கழிவறை

கழிவு நீர் வெளியேறாத அளவிற்கு பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-03-20 05:12 GMT
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்குட்பட்ட கடை தெருவில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில்  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த 2 கழிவறைகள் கட்டப்பட்டன. இதனை, இப்பகுதியில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி, அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, செப்டிக் டேங்க்-ல் இருந்து வெளியேறும் கழிவு நீரால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கழிவறையை மறுசீரமைப்பு செய்து, முறையாக கழிவுநீர் வெளியேறாத அளவிற்கு பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News