பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு

வணிகம் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது;

Update: 2025-03-20 05:47 GMT
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்கள் வர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் சுற்றுலாத் தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைவில் நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்டம் சார்பில் அறிவிப்பு. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலா தொழிலையும், விவசாயத்தையும் கொண்டு பொருளாதாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் நடைமுறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் 6000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்டம் சார்பில் இ-பாஸ் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட தலைவர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வியாபாரி சங்கங்கள், காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம், கட்டுமான பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் 6000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, மலை தோட்ட காய்கறிகளுக்கும், பசுந்தேலைக்கும் உரிய விலை கிடைக்காமல் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தொழிலையே நம்பி உள்ள நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளதால் மிகப்பெரிய அளவிலான போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் போன்றவை நடத்தப்பட உள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டி: ஃபரூக், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர்.

Similar News