நீலகிரிமாவட்டம் குன்னூரில் மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி
இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.;
நீலகிரிமாவட்டம் குன்னூரில் மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நீலகிரி திமுக கே எம் ராஜு பங்கேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் விபி தெருவில் அண்ணா பாரம் தூக்கும் தொழிற்சங்கம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம் தூக்கும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சார்பாக ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னூர் விபி தெருவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எம். ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் குன்னூர் நகர மன்ற தலைவர் துணை தலைவர் மற்றும் இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.