மதுக்கடைகள் முன்பு முதல்வர் புகைப்படங்களை ஒட்டிய பாஜக நிர்வாகி

சிவகங்கை நகர் பகுதிகளில் தமிழக முதல்வரின் புகைப்படங்களை ஒட்டிய பாஜக நிர்வாகிகள்;

Update: 2025-03-20 10:52 GMT
சிவகங்கை பேருந்து நிலையம் பகுதியில் மதுக்கடை முன்பு உள்ள சுவற்றில் தமிழ்குடி மக்களின் அப்பா என அச்சிடப்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை சிவகங்கை மாவட்ட பாஜக மகளிர் அணி பொதுச்செயலாளர் ஹேமா மாலினி ஒட்டினர். முதல்வரின் புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தற்போது மது கடைகள் மட்டும் இல்லை எனவும், இதனால் ஒட்டியதாகவும் தெரிவித்தார்

Similar News