கலை நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
கலை நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்;
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு வருகின்ற மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் www.artandculture.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் 9786341558 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.