டீக்கடைக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
சிங்கம்புணரி அருகே டீக்கடைக்குள் புகுந்த ஆம்புலன்ஸால் பரபரப்பு;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றபோது மதுரையில் இருந்து எஸ்.வி.மங்கலம் நோக்கிச் சென்ற தனியார் வாடகை கார் மீது மோதி தாறுமாறாக சென்று எதிரே சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் ஆம்புலன்ஸ் புகுந்து விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்