பேருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

திருப்பத்தூர் அருகே பேருந்து சக்கரம் கழன்று ஓடிய நிலையில் பயணிகள் அலறியடித்தனர்;

Update: 2025-03-20 11:54 GMT
திருச்செந்தூரிலிருந்து கும்பகோணத்துக்கு சென்ற தமிழ்நாடு அரசு விரைவு மிதவைப் பேருந்தை ஓட்டுநர் ஜெஸ்டின் ஆர்தர் (55) ஓட்டிச்சென்றார். திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெனிபர் (41) நடத்துனராக இருந்தார். திருப்பத்தூர் அருகே பேருந்து வந்த போது திடீரென ஓட்டுநர் சீட்டுக்கு கீழ் உள்ள முன்பக்க டயர் பேரிங் கப்செட் உடைந்து தனியாக கழண்டு பேருந்தின் முன்பாக டயர் ஓடியது. இதில் பயணித்த 25 பயணிகளும் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்

Similar News