வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
நெற்குப்பை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 87 வளர்ச்சிப் பணிகள் ரூ.14.32 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2024-25) நெற்குப்பை பேரூராட்சி பகுதிகளில் ரூ.391.78 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 27 வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்