தென்காசி அருகே அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி;

Update: 2025-03-20 12:52 GMT
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் உள்ள ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது 1951 ஆண்டில் துவங்கப்பட்டு, 74 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் தற்போது 148 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது இதே போல செங்கோட்டையில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக, இந்த பள்ளி கட்டிடத்தின் தலைமை ஆசிரியர் இருக்கும் பழமையான அறையின் மேற்கூரை மழையில் நனைந்து இன்று இடிந்து விழுந்தது நல் வாய்ப்பாக ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. செங்கோட்டையில் அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததை தொடர்ந்து விரைந்து பள்ளி கட்டடத்தை பராமரிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த பள்ளியில் தான் இஸ்ரோவின் சார்பில் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிய நிகர்ஷாஜி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது பழமை வாய்ந்த அரசு பள்ளி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News