குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் ஈகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை செல்லம்மாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை தமிழ் செல்வி முன்னிலை வகித்தார். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் சுரேஷ்குமார், பறவையும், சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் சூழலியல் கருத்துக்களை எடுத்துக் கூறினார். சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறும் விதமாக, பள்ளிக்கு மரத்தால் செய்யப்பட்ட சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது.நெகிழி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு காகிதப்பை வழங்கப்பட்டது. பல்வேறு பள்ளிகளுக்கு சிட்டுக்குருவி கூடு, ஈகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் சந்தோஷ் காட்சன் ஐசக் செய்திருந்தார்.