ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்;
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறதுஇதில் சோழிய வேளாளர் சமூக தெய்வக்குழு உதகை சார்பாக தேர்த்திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது காலை முதலே சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மாவிளக்கு ஊர்வலங்கள் நடைபெற்றது பின்பு மதியம் அன்னதானமும் நடைபெற்றது மாலை 6:00 மணி அளவில் அம்மனின்திருவீதி உலா நடைபெற்றது இதில் கமலா வாகனத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த ஊர்வலமானது உதகை மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று அம்மனின் சன்னிதானம் வந்தடைந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்