கோவை: சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட குழிகள் !
கோவை, அவினாசிலிங்கம் பல்கலைக் கழக சாலையில் நேற்று திடீரென மூன்று குழிகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

கோவை, அவினாசிலிங்கம் பல்கலைக் கழக சாலையில் நேற்று திடீரென மூன்று குழிகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர். மேலும் அங்கு இருந்த மூன்று குழிகளும் 7 அடி ஆழத்தில் இருப்பதால் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாக்கடை குழாய் நீர் கசிவு ஏற்பட்டதால் இந்த குழிகள் ஏற்பட்டதாக, அங்கு பணி புரியும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் பணி முடிவடையும் என்றும் தெரிவித்து உள்ளனர். சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த குழியால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.