மதுக்கரை: மதுக்கரை: பட்டா வழங்குவதில் முறைகேடு- பொதுமக்கள் சாலை மறியல்
பட்டா வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.;

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குட்டிகவுண்டன்பதி, புது காலனி பகுதியில் காலி இடத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதாக வருவாய்த்துறை முன்பு கூறியிருந்தது. ஆனால், தற்போது வேறு ஊரைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம்-வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் சாலை நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி சாவடி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காவல் துறையினரின் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.