குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு;

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் புதன்கிழமைகளில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலையில் பழையகுற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நண்பகலுக்கு பிறகு அருவியில் நீா்வரத்து குறைந்ததையடுத்து, பழையகுற்றாலம் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பேரருவி மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் அருவிகளில் தண்ணீா்விழுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.