
மாவட்டத்தில் மருந்தாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால், 425 பணியிடங்களுக்கான மருந்தாளர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்ள விண்ணப்ப நகல், போட்டோ மற்றும் ஆதார் எண்ணுடன், கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் வேலைதேடுவோர் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.