
தியாகதுருகம் அருகில், தண்ணீர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தியாகதுருகம் புக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் மலர்க்கொடி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, நீரின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மழைநீர் சேமிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றனர்.