மனுக்களுக்கு உடனடி தீர்வு

தீர்வு;

Update: 2025-03-21 03:11 GMT
மனுக்களுக்கு உடனடி தீர்வு
  • whatsapp icon
மாவட்டத்தில் மக்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களை கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், கழிவுநீர் அகற்றும் ஊர்தி அனுமதி மற்றும் செயல்பாடு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Similar News