நுாலகத்திற்கு ஓவிய பயிற்சி உபகரணம் வழங்கல்

வழங்கல்;

Update: 2025-03-21 03:14 GMT
நுாலகத்திற்கு ஓவிய பயிற்சி உபகரணம் வழங்கல்
  • whatsapp icon
மணலுார்பேட்டை கிளை நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் கோடை காலத்தில் மாணவர்கள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க, ஓவிய பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்நிலையில் சென்னை, வேளச்சேரியில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் மணலுார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் அவரது மனைவி சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஓவிய பயிற்சிக்கான உபகரணங்களை, கிளை நூலகத்திற்கு இலவசமாக வழங்கினர். இதை நூலகர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அம்முரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

Similar News