
கள்ளக்குறிச்சியில் நடந்த சுற்றுச்சூழல் அறிவியல் கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில், தேசிய பசுமைப்படை பள்ளி மாணவர்களின், மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் அறிவியல் கண்காட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.இந்த கண்காட்சியை பள்ளிக்கல்வி துறை உதவி திட்ட அலுவலர் மணி துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் கலாபன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி, வேல்முருகன் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், 50 பள்ளி மாணவர்களின் படைப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றன. அதில் சிறுதானியத்தின் நன்மைகள், காளான் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காற்று மற்றும் நீர் மாசுபாட்டை தடுக்கும் முறைகள், சோலார் சிஸ்டம், இயற்கை முறையிலான பழங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் பழனிவேல், முருகன், அலெக்சாண்டர், ராஜவேல், செந்தில், சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.