
குமரி மாவட்டம் குமாரக்கோயில், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைக்கு வருகின்ற ஏழை பெண் குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதி மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உதவிகள் வழங்கினார். பத்மநாபபுரம் திமுக நகர பொருளாளர் ஸ்ரீராம், கழக கிளை செயலாளர் லதா, குமாரக்கோயில் மேல் சாந்தி ஜெயராம் போற்றி உட்பட பலர் பங்கேற்றனர். திருவிழாக்குழு நிர்வாகிகள் பிரசாத், சுனில்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.