சுசீந்திரத்தில் சாலையில் வீணாகும் குடிநீர்

பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-03-21 04:04 GMT
சுசீந்திரத்தில் சாலையில் வீணாகும் குடிநீர்
  • whatsapp icon
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தரை வழியாக பைப்பு மூலம் சுசிந்திரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது.        கடந்த 15 நாட்களுக்கு மேலாக தேரூரில் இருந்து சுசீந்திரம் செல்லும் சாலை அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்கின்றது.        வெயில் காலத்தில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இது போல குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை உடனடியாக சரி செய்ய வேண்டுமெனவும் இதுபோல் வேறு எங்காவது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்  வீணாகின்றதா?  என அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கையாக குடிநீர் பைப்புகளை குடிநீர் வீணாகாமல் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News