குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 29ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற என்று கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார். உலக தண்ணீர் தினமான மார்ச் 22ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் நிர்வாகங்களால் மார்ச் 29ஆம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் முதல் 11 மணி அளவில் நடைபெறும் என தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளில் 29ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீர் வளத்தை காப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், தண்ணீரின் தேவையை, சிக்கனத்தை மனதில் வைத்து செயல்படுத்துதல் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கபடும். எனவே பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்படலாம். இவ்வாறு செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.