திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள்,வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரிசல்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது அவதூறு பரப்பும் வகையில் ஒயின் ஷாப்களில் கழகத்தலைவர் படத்தை பா.ஜ.க.வினர் ஒட்ட வந்தால் அவர்களை ஓட ஒட விரட்டி அடிக்க வேண்டும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் பேச்சு;

Update: 2025-03-21 05:09 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கரிசல்பட்டி, ஆடலூர், பன்றிமலை, தருமத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த தி.மு.க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரிசல்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் தருமத்துப்பட்டி பிரபாகரன், கரிசல்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோனூர் திருப்பதி, ஜஸ்டின் மிக்கேலம்மாள், சுப்புலட்சுமி வள்ளுவர்தாஸ், தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார் அவரையடுத்து தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான ப.க.சிவகுருசாமி பேசும்போது, திமுகவினரை பொறுத்தவரை தேர்தல் பணியாற்றுவதில் யாரும் சுணக்கம் அடைவது கிடையாது. ஆனால் எதிர்க்கட்சிகள் குறுந்தகவல்கள் மூலம் நமது கழகத்தையும், கழகத்தலைவர் மீதும் அவதூறாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். அதை முறியடிக்கத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் போடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வினர்திட்டமிட்டு நமது கழகத்தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் ஒயின் ஷாப்களில் கழகத்தலைவர் போட்டோவை ஒட்டி வருகின்றனர். இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஆத்தூர் தொகுதியில் எந்த இடத்திலும் யாரும் படம் ஒட்டவிடக்கூடாது. அப்படி ஒட்ட வருபவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். ஓட ஓட விரட்டி அடிங்கள் நம்மை ஆத்தூர் தொகுதியின் காவல் தெய்வம் அண்ணன் ஐ.பி. காப்பாற்றுவார். இதை உணர்ந்து செயல்படுங்கள் என்றார். ஆலோசனைக் கூட்டத்தில் கன்னிவாடி பேரூர் கழக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், ரெட்டியார்சத்திரம் நிலவலவங்கி முன்னாள் மேலாளர் சக்கரவர்த்தி மணிமாறன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் திருப்பதி, கரிசல்பட்டி ஜோசப் ஆசான், ஒன்றிய பிரதிநிதி மணிமாறன், தருமத்துப்பட்டி கிளைச் செயலாளர் செல்வம், ஆடலூர் பாஸ்கரன், அமைதிச்சோலை ஜோதி, திருஞானம், ஆத்தூர் தொகுதி ஐ.டி.விங் பொறுப்பாளர்கள் கணேசன், தனிஸ்லாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News