குடும்ப நன்மை வேண்டி விளக்கு பூஜை

சிவகங்கையில் குடும்ப நன்மை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர்;

Update: 2025-03-21 07:06 GMT
சிவகங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஒரு சொல் வாசகி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு ஏராளமான பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்கள பொருட்களை வைத்து கணபதி பூஜை உடன் திருவிளக்கு பூஜையை துவங்கினர். இதில் குடும்ப நன்மைக்காகவும் புத்திர பாக்கியம், குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வழிபாடு செய்தனர்

Similar News