குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மங்காடு தபால் நிலைய சந்திப்பு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் சதீஷ்குமார் (42). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 9- ம் தேதி இரவு வழக்கம் போல் படுக்க சென்றார். மறுநாள் காலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த மனைவி லில்லி பாய் ( 34) அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை ஸ் இருந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.