கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு வானவியல் பயற்சி!
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு வானவியல் பயற்சி அளித்தனர்;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் வானவியல் குறித்த செயல்விளக்கப் பயிற்சி நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வானவியல் செயல் விளக்க பயிற்சிக்கு தலைமை ஆசிரியை ராணி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றார். அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்துகொண்டு தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் வானவியல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். மாணவர்கள் கலந்து கொண்டு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட்டு வியந்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை பராசக்தி நன்றி கூறினார்.