உலக வனதினம் இன்று (மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு உண்டு உறைவிட பள்ளி பாபநாசம் மேலனை பள்ளி மாணவர்களுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் வனத்துறையினர் உலக வனதினம் குறித்து புத்தகங்களை வழங்கி உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.