காப்புக்காடு : டிரைவருக்கு கம்பியால் அடி

முன்விரோதம்;

Update: 2025-03-21 11:18 GMT
குமரி மாவட்டம் விளாத்துறை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ரெக்ஷந்த் (25). ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி பிறீமா.  அதே பகுதியை சேர்ந்தவர் டைட்டஸ் (36). பெயின்டிங் வேலை செய்கிறார்.  பிறீமாவை பார்க்கும் போது டைட்டஸ் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ரெக்சந்துக்கும் டைட்டசுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.      இந்த நிலையில் சம்பவ தினம் ரெக்ஷந்த் டைட்டஸை பார்த்து ஏன் என் மனைவியை பற்றி தவறாக பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்கு தகராறு ஏற்பட்டு, திடீரென டைட்டஸ் கம்பியை எடுத்து ரெக்ஷந்தை அடித்து காயப்படுத்தி உள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.       இதில் படுகாயம் அடைந்த ரெக்ஷந்த் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து டைட்டஸை கைது செய்தனர்.

Similar News